என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » குலாம்நபி ஆசாத்
நீங்கள் தேடியது "குலாம்நபி ஆசாத்"
பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் உரிமை கோராது என்று கூறிய குலாம்நபி ஆசாத், மோடியை அகற்றுவதே இலக்கு எனவும் கூறி உள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுலிடம் ஒப்படைத்த பிறகு தீவிர அரசியல் ஈடுபாடுகளில் இருந்து சோனியா சற்று விலகியே இருந்தார். ஆனால் பா.ஜனதா கட்சியை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க வேண்டுமானால் 2004-ம் ஆண்டு தடாலடியாக சில எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டியது போல இப்போதும் ஒன்று திரட்ட வேண்டிய நிர்ப்பந்தம் சோனியாவுக்கு ஏற்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டே மாநில கட்சிகளின் தலைவர்களை 23-ந்தேதி டெல்லிக்கு வருமாறு சோனியா அழைத்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் அன்றைய தினம் இரவு தனது வீட்டில் முக்கிய மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் விருந்து கொடுக்க உள்ளார். அவர் விருந்து கொடுக்கும் சமயத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தெரிந்து விடும்.
அந்த தேர்தல் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க சோனியா வியூகம் வகுத்துள்ளார். சோனியாவின் ஒரே குறிக்கோள், காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைக்காவிட்டாலும் கூட பரவாயில்லை, பா.ஜனதா ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பது தான். இதற்காக எந்த தியாகத்தையும் செய்ய அவர் தயாராகியுள்ளார்.
தேர்தல் முடிவுகளில் இழுபறி ஏற்பட்டால், எதிர்க்கட்சித் தலைவர்களில் யாரை வேண்டுமானாலும் பிரதமராக ஏற்க தயார் என்று சோனியா இறங்கி வந்துள்ளார். இதை அவர் எதிர்க்கட்சி தலைவர்களுடன் போனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். 23-ந்தேதி மாலை டெல்லிக்கு வந்து விடுமாறும் அவர் மாநில கட்சி தலைவர்களை அழைத்து வருகிறார்.
தேவைப்பட்டால் 23-ந் தேதி இரவே மாநில கட்சித் தலைவவர்களுடன் சேர்ந்து ஜனாதிபதியை சந்தித்து பேசவும் சோனியா திட்டமிட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஒரு நிமிடத்தை கூட வீணாக்கக் கூடாது என்பதற்காக சோனியா இத்தகைய முயற்சிகளை நேரடியாக மேற்கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் அவரது அதிரடி வியூகத்துக்கு முதல் கட்ட வெற்றி கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
சோனியாவின் இந்த அதிரடி வியூகத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் சிம்லாவில் அளித்த பேட்டி வருமாறு:-
பாராளுமன்றத் தேர்தலின் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு கட்டத்தில் நாம் இருக்கிறோம். அரசியலில் எனக்கு இருக்கும் அனுபவத்தை அடிப்படையாக வைத்து சொல்கிறேன், நிச்சயமாக பா.ஜனதா மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது இல்லை.
நரேந்திர மோடியால் இரண்டாவது முறையாக பிரதமர் பதவிக்கு வர முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை நிச்சயம் கூடுதல் இடங்கள் கிடைக்கும். அதை ஏற்று கருத்து ஒற்றுமை அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைத்தால் ஏற்றுக்கொள்வோம். கிடைக்காவிட்டாலும் அது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை.
பிரதமர் பதவி யாருக்கு என்பதை பிரச்சினை ஆக்க மாட்டோம். எங்கள் (காங்கிரஸ்) தலைமை இந்த விஷயத்தில் மிக, மிக தெளிவாக உள்ளது. மாநில கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்குள் ஒருமித்த கருத்துடன் யாரை பிரதமராக தேர்வு செய்தாலும் அதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும். பிரதமர் பதவிக்காக காங்கிரஸ் விடாப்பிடியாக உரிமை கோராது.
இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.
காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரசில் தூதர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சந்திரசேகர ராவ், ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் மூவரையும் அழைத்து வரும் பொறுப்பு கமல்நாத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அகமது படேல், குலாம்நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம் ஆகியோர் மாயாவதி, அகிலேஷ், மம்தாவுடன் பேசி வருகிறார்கள். இதன் மூலம் மாநில கட்சிகள் பா.ஜனதா பக்கம் போவது தடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்காகவே நிரவ் மோடியை கைது செய்துள்ளனர் என காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். #NiravModiExtradition #LondonCourt #Congress #GhulamNabiAzad
புதுடெல்லி:
இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் , அவரது நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர்.
இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தப்பி ஓடிய நிரவ் மோடி பிரிட்டனில் இருப்பது தெரியவந்தது. அவரை நாடு கடத்திக் கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது.
இதுதொடர்பாக, அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் சமீபத்தில் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து, நிரவ் மோடி லண்டன் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்காகவே நிரவ்மோடியை கைது செய்துள்ளனர் என காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாடு தப்பிச்செல்ல உதவியதே பாஜகதான். தற்போது அவர்கள் தான் அவரை திரும்பி கொண்டு வருகின்றனர். பாராளுமன்ற தேர்தலுக்காகவே நிரவ் மோடியை கைது செய்துள்ளனர். தேர்தல் முடிந்ததும் நிரவ் மோடியை மீண்டும் வெளிநாட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என தெரிவித்தார். #NiravModiExtradition #LondonCourt #Congress #GhulamNabiAzad
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X